உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது கணக்கு குழு ஆய்வு கடலுார் எம்.எல்.ஏ., பங்கேற்பு

பொது கணக்கு குழு ஆய்வு கடலுார் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: தேனி மாவட்டத்தில் நடக்கும் அரசுத்திட்டப்பணிகளை, சட்டசபை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், செந்தில்குமார், சேகர் உள்ளிட்ட குழுவினர் தேனி மாவட்டத்தில் நடக்கும் அரசுத்திட்டப்பணிகளை பார்வையிட்டனர். தேனி மாவட்டம், அல்லிநகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், பூதிப்புரம் நெடுஞ்சாலைப்பணிகள், பெரியகுளம் அடுத்த மதுராபுரியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலெக்டர் ரஞ்ஜித்சிங் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ