| ADDED : ஜூலை 22, 2024 01:22 AM
கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று மாலை பெண் ஒருவர் வந்தார். அவர் திடீரென கையில் இருந்த துணி துவைக்க பயன்படுத்தப்படும் திரவத்தை குடித்து மயங்கி விழுந்ததால்பரபரப்பு நிலவியது. அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அவரிடம் நடத்திய விசாரணையில், குள்ளஞ்சாவடி, கட்டியங்குப்பத்தைச் சேர்ந்ததரணிசீலன் மனைவி விஜயலட்சுமி, 38; எனத் தெரிந்தது. இவரது வீட்டின் வழிப்பாதையை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 பேர் தவறான யூ.டி.ஆர்.பட்டா மூலமாக வழிமறித்து வேலி அடைக்க ஏற்பாடுசெய்தனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டது.எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.