மேலும் செய்திகள்
தேசிய கராத்தே மாணவர்கள் சாதனை
04-Mar-2025
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்
16-Feb-2025
கடலுார் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சாதனை படைத்து வருகின்றனர்.கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், கடந்த 15 ஆண்டுகளாக குத்துச்சண்டை விளையாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் குத்துச்சண்டை மாணவர்களுக்கு விளையாட்டு விடுதியில் ஒதுக்கீடும் கிடைத்துள்ளது. இங்கு, தற்போது ஐந்து மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியாளர் சுரேந்தர் மேற்பார்வையில் விடுதி மாணவர்களுடன் சேர்த்து 25 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் விடுதி மாணவர்கள் சுரேந்தர்,17; என்பவர் இரண்டு தங்கம், ஒரு வெண்கல பதக்கமும், ராகுல்,16; ஒரு தங்கம், இரண்டு வெண்கலமும், பாலாஜி,13; ஒரு தங்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இங்கு பயிற்சிபெற்ற மாணவர் ஒருவர், சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் உருவெடுத்துள்ளார்.காவல் துறையில் 10 பேர், கப்பல் பணிக்கு 3பேர் என பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், குத்துச்சண்டையில் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பயிற்சி பெறுகின்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனையும் படைத்து வருகின்றனர். மாணவர்களின் ஆர்வமும், கடின பயிற்சியும் அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் என்றார்.
04-Mar-2025
16-Feb-2025