உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்  

பண்ருட்டி: பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பொற்செழியன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க வட்ட செயலாளர் குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை