உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த கரும்பூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.பண்ருட்டி அடுத்த கரும்பூர் ஊராட்சி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மே மாதம் 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினந்தோறும் மகாபாரத ஐ தீக முறைப்படி திருவிழா நடந்தது. 25ம் தேதி ராஜசுயயாகம், சிசுபாலன் வதை, சூதாடல்,26ம் தேதி பாண்டவர் வனம்புகுதல், அர்ஜூனன் தபசு. 27ம் தேதி விராடபருவம், கீச்சகன்வதை, பாண்டவர் வேண்டுதல், பகவான் துாது. 28ம் தேதி விதுரர் விருந்தும், துரியோதனிடம் நாடு கேட்டல், 29ம் தேதி அரவான் களபலி, கீதை உபதேசம். 30ம்தேதி குருேஷத்திரபூமி அழிவும், சக்கரவர்த்தி கோட்டை அழிவு, கூந்தல்முடி அலங்கார பூஜை நடந்தது.தொடந்து நேற்று தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.இன்று தர்மர் பட்டாபிேஷகம், நாளை 2ம்தேதி சந்தன காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை