உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேல்பாதியில் தீமிதி விழா

மேல்பாதியில் தீமிதி விழா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.நெல்லிக்குப்பம் மேல்பாதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திரு விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை அர்ஜூனன் சமேதராய் திரவுபதியம்மன் மற்றும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தீக்குண்டம் முன்பு எழுந்தருளினர்.அதையடுத்து, பக்தர்கள் வேண்டுதலின்பேரில், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை