மேலும் செய்திகள்
கமிஷனர் மாற்றம்
08-Mar-2025
பண்ருட்டி: தினமலர் செய்தி எதிரொலியாக, பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பொறுப்பு அலுவலராக பொறியாளர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக இருந்தது. கூடுதல் பணியாக விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி கவனித்து வந்தார். இவர் பண்ருட்டி நகராட்சிக்கு வராமல் விருத்தாசலத்தில் இருப்பதால் எந்த பணிகளும் நடைபெறாமல் ஸ்தம்பித்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பண்ருட்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பு வகித்து வந்த விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி விடுவிக்கப்பட்டார். பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பொறுப்பு அலுவலராக பொறியாளர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
08-Mar-2025