உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு

திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு

சிதம்பரம், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருடுபோன மொபைல் போன்களை போலீசார் கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மொபைல் போன்கள் காணவில்லை என, பலர் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருடு போன மொபைல் போன் விபரங்களை சி.இ.ஐ.ஆர்., என்ற ஆப்பில் பதிவு செய்த போது, திருடு போன மொபைல் போன்கள் தற்போது பயன்படுத்தும் நபர்களின் விவரங்கள் தெரியவந்தது.இதன் அடிப்படையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருடுபோன 16 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர்களிடம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ