அ.தி.மு.க., ஆட்சி சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கல்
கடலுார் : கடலுார் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பேரவை செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் வடக்குத்து முதல் நெய்வேலி ஆர்ச் கேட் வரை ஊர்வலமாக சென்று, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், கமலக்கண்ணன், வினோத், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவநாதன்.பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், இணைச் செயலாளர் பெருமாள், விவசாய அணி செயலாளர் லோகநாதன், மாணவரணி செயலாளர் சஞ்சீவி, மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்கரத்தினம், வர்த்தக பிரிவு செயலாளர் ராமலிங்கம், இலக்கிய அணி செயலாளர் உமாதேவன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.