உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

விருத்தாசலம் நகராட்சி பள்ளிகளில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 12 பள்ளிகளுக்கு, விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்படுகிறது. இதனை, விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நகர்மன்ற சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.அப்போது, காலை உணவு திட்டம், மதிய சத்துணவு, முட்டை உள்ளிட்ட உணவுகள் மற்றும் கழிவறை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், ஆசிரியர்களிடம் குறைகள் கேட்டறிந்த அவர், நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். வார்டு கவுன்சிலர் வசந்தி புருேஷாத்தமன், தலைமை ஆசிரியர் கமலாதேவி உட்பட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை