உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட பேச்சுப்போட்டி எஸ்.டி.ஈடன் பள்ளி வெற்றி

மாவட்ட பேச்சுப்போட்டி எஸ்.டி.ஈடன் பள்ளி வெற்றி

வடலுார்: வடலுார் எஸ்.டி .ஈடன் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி இந்திரா நகர் அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. போட்டியில், எஸ்.டி.ஈடன் பள்ளி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பிரிவில் ஷபானாபானு முதலிடம், வர்ஷா மூன்றாம் இடம், 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவில் தமிழ்இளவன் முதலிடம், பானு மூன்றாம் இடமும் பிடித்தனர். 6 மற்றும் 8ம் வகுப்பு பிரிவில் மகதி இரண்டாம் இடம், கனிஷ்கா மூன்றாம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்கள், நாளை 14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை