உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்,: ஸ்ரீமுஷ்ணத்தில் ஒன்றிய, நகர தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு அவைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட கலை இலக்கிய அணி வாசு ராஜேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது. செப்டம்பர் மாதம் நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது. கட்சியில் இளைஞர்களையும், மகளிரையும் அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் கிருபானந்தம், பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், கவுன்சிலர்கள் சதீஷ்குமார், பன்னீர் செல்வம், தேவேந்திரன், நாகராஜன், ஷாஜகான், செல்வி கர்ணன், ராமையன், இளைஞரணி வீரவேல், பழனிசாமி, மாணவரணி சாமிநாதன், மகளிரணி ராசவள்ளி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை