உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூரத்தேங்காய் உடைத்து தி.மு.க.,வினர் சென்டிமென்ட் பிரசாரம்

சூரத்தேங்காய் உடைத்து தி.மு.க.,வினர் சென்டிமென்ட் பிரசாரம்

கடலுார்: கடலுாரில் காங்., வேட்பாளருக்கு ஆதரவாக, தி.மு.க.,வினர் ஆஞ்சநேயர் கோவிலில் சூரத் தேங்காய் உடைத்து தேர்தல் பிரசாரத்தை சென்டிமென்டாக துவங்கினர்.கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிசராத் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்த கடலுார் மாநகராட்சியில் நேற்று தி.மு.க.,வினர் பிரசாரத்தைத் துவக்கினர்.இதற்காக, கடலுார் செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து, அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி உள்ளிட்டோர் சூரத் தேங்காய் உடைத்து பயபக்தியுடன் பிசாரத்தைத் துவங்கினர்.மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கு புளி சாதம், பொங்கல், தயிர், சுண்டல் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ