உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் துறைமுகத்தில் மீன்வரத்து குறைவால் விலை கிடுகிடு

கடலுார் துறைமுகத்தில் மீன்வரத்து குறைவால் விலை கிடுகிடு

கடலுார்: கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வால் துறைமுகத்தில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.கடலில் நீரோட்டம் மாறுபாடு காரணமாக மீன்கள் பாடு குறைந்து, கடலுார் துறைமுகத்தில் கடல் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்விலை அதிகரித்து காணப்பட்டது. பாரை, சென்னாஓரை, சங்கரா, சீலா, ஊலா, வஞ்சிரம், வெள்ளசிலங்கம் ரக மீன் வகைகள் தான் மீனவர்கள் எடுத்து வந்தனர். கடலுார் துறைமுகம் மீன் மார்க்கெட்டில் கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,300 முதல் 1500 வரை விற்கப்பட்டது. சங்கரா ரூ.580, சீலா, வெள்ள சிலங்கம் வகை மீன்கள் ரூ.400, ஊலா ரூ.200, சாம்பாரை, சென்னா ஓரை மீன்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.200க்கு விற்கப்பட்டன. மீன் வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாங்கும் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல், மீன்பிடி துறைமுகம், மீன் மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி