உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

சேத்தியாத்தோப்பு, : கும்பகோணத்தில் இருந்து அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. சோழதரம் அடுத்த மாமங்கலம் செக்போஸ்ட் அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது பஸ் மோதியது. அதில், பைக்கில் வந்த முதியவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்து சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், இறந்தவர் தண்டகாரன்குப்பம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த மகாராஜன், 76, என, தெரியவந்தது.விபத்து ஏற்படுத்திய அரசு விரைவு பஸ் டிரைவர் சண்முகவேல் மீது சோழதரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி