உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில் மின்சாரம் தாக்கியதில், மின் ஒப்பந்த ஊழியர் இறந்தார்.காட்டுமன்னார்கோவில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் விக்னேஷ்குமார், 32; காட்டுமன்னார்கோவில் மின் துறையில், ஒப்பந்த ஊழியாராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பெரியார் நகரில், ஒரு வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின்கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.அப்போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !