உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பு; விருதையில் மக்கள் அதிருப்தி

கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பு; விருதையில் மக்கள் அதிருப்தி

விருத்தாசலம் : விருத்தாசலம் பெரியார் நகரில் ராட்சத வடிகாலை ஆக்கிரமித்து தனிநபர் கட்டியுள்ள சிமென்ட் மேடையால், மழை காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் பெரியார் நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், தீயணைப்பு நிலையம், வங்கிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. மழைக் காலங்களில் வழிந்தோடும் மழைநீர், அப்பகுதி வழியே செல்லும் ராட்சத வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்படுகிறது.இந்நிலையில், தெற்கு பெரியார் நகர், ஆப்பிள் தெரு வழியாக செல்லும் வடிகாலை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர், சிமென்ட் மேடை கட்டியுள்ளார். இதனால், வடிகாலில் ஒரு பகுதி தடுக்கப்பட்டு, கழிவுநீர் வழிந்தோடும் பாதை குறுகியது.மழைக்காலங்களில் வழிந்தோடும் வெள்ள நீர், வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் வழிந்தோடி குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வடிகாலை ஆக்கிரமித்து சிமென்ட் மேடை அமைத்துள்ள செயல் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை