உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் - பட்டம் மாணவர்களுக்கு அறிவுக்களஞ்சியம்: தவ அமுதம் பள்ளி தாளாளர், முதல்வர் பெருமிதம்

தினமலர் - பட்டம் மாணவர்களுக்கு அறிவுக்களஞ்சியம்: தவ அமுதம் பள்ளி தாளாளர், முதல்வர் பெருமிதம்

ஸ்ரீமுஷ்ணம் : 'தினமலர் - பட்டம்' இதழை மாணவர்கள் தவறாமல் படித்தால், எதிர்காலங்களில் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவதற்கான அறிவுக் களஞ்சியமாக விளங்குகிறது' என தவ அமுதம் பள்ளி தாளாளர் பேசினார்.ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் புதுச்சேரி ஆச்சார்யா கல்விக்குழும் இணைந்து வினாடி, வினா நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் செங்கோல் பேசுகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர்களின் எதிர்கால நலனுக்காக பட்டம் இதழை அளித்து வரு்கிறது. வாரத்தில் 5 நாட்கள் வரும் 'தினமலர் - பட்டம்' இதழை தவறாமல் படித்து பயன்பெறும் மாணவர்கள் எதிர்காலங்களில் போட்டித்தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற அறிவுக் களஞ்சியமாக விளங்குகிறது.'தினமலர்' நாளிதழ் 73ம் ஆண்டு துவக்க விழாவில் நமது பள்ளியில் பட்டம் வினாடி - வினா நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஏழை எளிய கல்வி பயலும் மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் ஊற்றாக 'தினமலர் - பட்டம்' இதழ் விளங்குகிறது' என்றார்.பள்ளியின் முதல்வர் புனிதவள்ளி பேசுகையில், 'மாணவர்களுக்கான நலனில் பெரும் பங்கு வகிக்கும் 'தினமலர் - பட்டம்' இதழ் அறிவுக் களஞ்சியமாக திகழ்கிறது. இந்த இதழில், தமிழ், அறிவியல், கணிதம், வரலாறு, பொது அறிவு அனைத்தையும் மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் உள்ளது. மேலும், 'தினமலர்' நாளிதழில் வெளியாகும் சிறுவர் மலர், வாரமலர், ஆன்மிக மலர் என அனைத்துமே பயனுள்ள வையாக திகழ்கிறது.மாணவர்கள் அனைவரும் 'தினமலர் - பட்டம்' இதழை படித்து, வரும் காலங்களில் போட்டித் தேர்வுகளான குருப் 1, குருப் 2 என அனைத்து தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சி பெறலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை