உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து நகை, பணம் திருட்டு பெண்ணாடம் அருகே துணிகரம்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு பெண்ணாடம் அருகே துணிகரம்

பெண்ணாடம்: பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47. விவசாயி. மனைவி மாலதி. இவர்களது மகளுக்கு வரும் 11ம் தேதி வளைகாப்பு நடக்க உள்ளது. இதற்காக 3 சவரன் வளையல் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை பீரோவில் வைத்திருந்தனர்.நேற்று காலை மாலதி அதே பகுதியில் நடந்த நுாறு நாள் வேலைக்கு சென்றுவிட்டார். ராஜேந்திரன் வேப்பூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். மாலை 4:00 மணிக்கு மாலதி வீட்டிற்கு வந்தபோது, பீரோ திறந்திருந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 3 சவரன் வளையல் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெண்ணாடம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேரித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ