உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரிம்சன் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் தினம்

கிரிம்சன் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் தினம்

கடலுார் : கடலுார் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கிரிம்சன் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிரிம்சன் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ் பிரபாகரன் தலைமை தாங்கினார். இயக்குனர் ஜேக்கப் ராஜா முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் அதிகாரி தாமரைச்செல்வன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஏஷியன் பெயிண்ட்ஸ் ராஜேந்திரபாபு, டாடா கெமிக்கல் அக்ஷ்ய லால் ஷா- சந்தோஷ்குமார் போடி, கிஷோர் குமார், டாக்ரோஸ் அருள்நாதன், கலர்கான் அன்பழகன் ஆகியோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.சுற்றுச்சுழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி பாராட்டினர். ஒவ்வொரு ஊழியர்களும் ஆண்டிற்கு 200 மரக்கன்றுகள் நடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உற்பத்தி துறை துணை பொது மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை