உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் நாளை கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலத்தில் நாளை கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, அரிமா சங்கம், சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், நாளை 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், கண் நோய் பற்றிய ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோர் கோவையில் உள்ள சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.மேலும், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் முகாமில் மறு பரிசோதனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி