உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

நெய்வேலி: நெய்வேலி அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெய்வேலி, அடுத்த ஆயிப்பேட்டை, ஊராட்சி தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் ரவி; வீட்டில் டைலர் கடை வைத்துள்ளார். இவரது மகன் விக்னேஸ்வரன், 17; ஆயிப்பேட்டை அடுத்த வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.தேர்வில் தோல்வியடைந்ததால், உடனடி தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில், அவர் மீண்டும் தோல்வியடைந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ்வரன் வீட்டின் அருகில் உள்ள முந்திரி மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை