பழைய இரும்பு கடையில் தீ விபத்து
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பழயை இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.விருத்தாசலம் ஆலடி சாலையில் விமல் என்பவர் பாத்திமா மெட்டல் என்ற பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது இரும்பு கடையில் பி.வி.சி., பைப்புகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் நேற்று காலை 11:00 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து வந்த விருத்தாசலம், மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.