உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

ராமநத்தம்,: இந்து முன்னணி, இந்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ராமநத்தத்தில் நடந்தது.முகாமிற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், பிச்சபிள்ளை, இந்து வியாபாரிகள் நலச்சங்க வட்டார செயலர் செந்தில்ராஜன், வட்டார தலைவர் மாயக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மதுமிதா, மீனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 100 நோயாளிகளுக்கு, கண்ணில் நீர், புரை, மாறு கண், பாதிப்புக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை