மேலும் செய்திகள்
கணவர் இறந்ததுக்கம்மனைவி விபரீத முடிவு
18-Feb-2025
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் ஆசிரியையின் கணவர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நெல்லிக்குப்பம் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 59; இவர் மேல்குமாரமங்கலம் ஒன்றிய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவரது கணவர் சந்திரன், 65; பைனான்சியர். இவர், தனது குடும்ப சொத்து பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று, பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்த தனது கணவர் சந்திரனுக்கு போன் செய்தபோது, எடுக்கவில்லை.அவரது மகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சந்திரன் மின் விசிறியில் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Feb-2025