உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு அலுவலகங்கள் வெறிச்

அரசு அலுவலகங்கள் வெறிச்

விருத்தாசலம்: பொது மக்கள் வருகையின்றி ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், வேளாண் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு மனுக்களுடன் வரும் பொது மக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து வந்தனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்கள், அந்தந்த அலுவலக வாசலில் உள்ள பெட்டிகளில் போட வேண்டும். அவற்றை அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.அதுபோல், நகராட்சி, ஒன்றிய சேர்மன்கள் அறைக்கு சீல் வைக்கப்பட்டதால், பொது மக்கள் வருகை குறைந்தது.இதனால் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ, கூல்டிரிங்ஸ் கடைகளிலும் வியாபாரம் சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !