மேலும் செய்திகள்
விபத்தில் காயமடைந்த தனியார் பள்ளி முதல்வர் சாவு
05-Aug-2024
விருத்தாசலம் : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கீழவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தராஜ், 38; கொத்தனார். விருத்தாசலத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் - சேலம் சாலையில் மணலுார் ரயில்வே மேம்மபாலத்தில் பைக்கில் சென்றார். அப்போது, முன்னால் சென்ற அரசு டவுன்பஸ்சின் மீது கோவிந்தராஜ் ஓட்டிச் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது.படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Aug-2024