மேலும் செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை
26-Feb-2025
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயான கொள்ளை உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 21ம் தேதி இரவு அம்மன் வீதியுலா, 22ம் தேதி மூன்று முகம் இருளகண்டனுடன் அம்மன் வீதியுலா, 23ம் தேதி பூவாலை கப்பரையுடன் நாக வாகனத்தில் வீதியுலா, 24ம் தேதி அக்னி கரகத்துடன் அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது.இதையடுத்து, 25ம் தேதி அம்மன் சிம்ம வாகனத்திலும், தாண்டவராயன் ரிஷப வாகனத்திலும் பாரிவேட்டை மற்றும் வீதியுலா, 26ம் தேதி காலை அம்மன் குறத்தி வேடம் அணிந்து மயானம் செல்லுதல் மற்றும் இரவு பூத வாகனத்தில் வீதியுலா நடந்தது.நேற்று மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் அம்மன் பூத வாகனத்தில் மாயனத்திற்கு வீதியுலா சென்று, மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
26-Feb-2025