உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி 

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி 

சிதம்பரம் : சிதம்பரம் அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ., பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடியை சேர்ந்தசுதாராணி எனபவரது குடிசை வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவலறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர்சுந்தரமூர்த்தி, மாவட்ட கழக இணை செயலாளர் ரெங்கம்மாள்,ஒன்றிய குழு உறுப்பினர் சேதுமாதவன், மற்றும் ரெங்கசாமி, கோவிந்தராசு,அறிவுச் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன்,செங்குட்டுவன், மணிவண்ணன், லெலின், கதிர்வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி