உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி

நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் வீடு கட்டுவோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி நகராட்சியில் பணிபுரியும் கோகுலகிருஷ்ணன், பண்ருட்டியில் கூடுதல் பொறுப்பாக இருந்து வருகிறார். இவர் 3 நகராட்சிக்கும் பணியை கவனிப்பதால் பண்ருட்டி நகராட்சிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறார்.இதனால் பண்ருட்டி நகராட்சியில் உடனடியாக கட்டட அனுமதி பெற முடியாத நிலை உள்ளது. கட்டட ஆய்வாளர் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்ட பின்பே அனுமதிக்கான பணம் கட்ட அனுமதிப்பதால் இவர் வருகைக்காக பலர் காத்திருப்பில் உள்ளனர்.பலர் அனுமதியை எதிர்பார்க்காமல் அரசியல்வாதிகள்,ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் புதிய கட்டடம் கட்டுகின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சி கட்டட ஆய்வாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்