உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் இரு கோஷ்டியாக தி.மு.க.,வினர் வெற்றி கொண்டாட்டம்

நெல்லிக்குப்பத்தில் இரு கோஷ்டியாக தி.மு.க.,வினர் வெற்றி கொண்டாட்டம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்றதை, அக்கட்சியினர் இரு கோஷ்டியாக கொண்டாடினர்.விக்கிரவாண்டி இடைதேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அதையடுத்து, நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேர்மன் ஜெயந்தி தனது ஆதரவாளர்களுடன் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணன், பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுடன் வேறு இடத்தில் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். தகவல் தொழில்நுட்ப அணி அருள்,நகர துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் முசாதிக்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., வெற்றி கொண்டாடத்தை கூட இரு கோஷ்டியாக கொண்டாடி கோஷ்டி பூசலை வெளிபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ