உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் ஸ்ரீஅபிராமி ஜூவல்லரி வெள்ளி மாளிகை ஷோரூம் திறப்பு

பண்ருட்டியில் ஸ்ரீஅபிராமி ஜூவல்லரி வெள்ளி மாளிகை ஷோரூம் திறப்பு

பண்ருட்டி : பண்ருட்டி ராஜாஜி சாலையில், திருச்சி கபே ஹோட்டல் அருகில் ஸ்ரீஅபிராமி ஜூவல்லரியின் வெள்ளி மாளிகை ஏசி ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.மணமேடு ஜி.ஆர்.எம்.மளிகை ஸ்டோர் குணசேகரன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், தொழில் வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வகித்தனர்.புதிய வெள்ளி மாளிகை ஏசி ஷோரூமை ஸ்ரீ அபிராமி ஜூவல்லரி அதிபர் தஷ்ணாமூர்த்தி, லதாதேவி தஷ்ணாமூர்த்தி, சந்தோஷ், சரவணன் திறந்து வைத்து வரவேற்றனர்.முதல் விற்பனையை சென்னை டி.ஆர்., வெள்ளி தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவன உரிமையாளர்கள் சச்சின் ரான்கா, கபில் ரான்கா, பரத் ரான்கா துவக்கி வைத்தனர். பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் ஜீவா வினோத்குமார் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.விசாலம் சண்முகம், ராதா சேதுராமன், ஜெயந்தி ராஜேந்திரன், சாவித்திரி சந்திரன், குமுதா ஏழுமலை, வள்ளி ரங்கநாதன், ஜெயலட்சுமி சேதுராமன், லதா ராஜா, விஜயலட்சுமி சக்கரபாணி, சங்கீதா முத்து ஆகியோர் குத்து விள்ளக்கேற்றினர்.விழாவில் எஸ்.பி. ஜூவல்லர்ஸ் அருள், டைல்ஸ் அதிபர் தண்டபாணி, ரோட்டரி சங்க நிர்வாகி சங்கர் மற்றும் நகைக்கடை அதிபர்கள், வர்த்தக சங்கபிரமுகர்கள், அரசியல் கட்சியனிர் பங்கேற்றனர்.ஸ்ரீ அபிராமி ஜூவல்லரி உரிமையாளர் கூறுகையில், சென்னை டி.ஆர்.,வெள்ளி நகைகள் சென்னை விலைக்கே இங்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்பனை செய்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ