உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் சுகாதார நிலைய கட்டுமான பணி ஆய்வு

நெல்லிக்குப்பம் சுகாதார நிலைய கட்டுமான பணி ஆய்வு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டுமான பணியை, நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதுமான இடவசதி இல்லாததால், அதன் அருகே, 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று அந்த பணியை நகராட்சி சேர்மன் ஜெயந்தி ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் வெங்கடாஜலம், கவுன்சிலர்கள் சத்தியா, பாரூக் உசேன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர் இல்லாததால், அவசரத்திற்கு கடலுார் செல்ல வேண்டியிருப்பதால், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டு மென சேர்மன் ஜெயந்தியிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்