உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

கடலுார்: கடலுார் அடுத்த விலங்கல்பட்டில் ஆத்மா வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் துரைசாமி, நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் அலுவலர் பொன்னிவளவன் மண் பரிசோதனை குறித்து பேசினார். அப்போது, வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி