உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார் : கடலுாரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசார கலை நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் செல்வம் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி திட்ட நோக்கவுரையாற்றினார். நலப்பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில், கல்லுாரி மாணவியர்கள் கலந்து கொண்டு, எய்ட்ஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.அப்போது, காசநோய் துணை இயக்குநர் கருணாகரன், மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி., மைய முதுநிலை டாக்டர் தேவ்ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ