உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜல்ஜீவன் திட்ட பணிகள்: அகரத்தில் மத்திய குழு ஆய்வு

ஜல்ஜீவன் திட்ட பணிகள்: அகரத்தில் மத்திய குழு ஆய்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே அகரம் ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்ட பணிகளின் செயல்பாடுகளை, மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில், 300 வீடுகளுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளனர். அதேபோல் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அந்தந்த வீட்டிலேயே சோக்பிட் அமைத்து உறிஞ்சு குழாய்கள் பொறுத்தியுள்ளனர்.மத்திய அரசின் இத்திட்டங்களின் செயல்பாடுகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குழு செயல் இயக்குனர் ஸ்ரீடிகேசிங், கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீமானார் பிரதீப் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். வீடுகளுக்கு நேரடியாக சென்று, திட்டத்தின் பயன்கள் குறித்து மக்களிடம் கேட்டு கலந்துரையாடினர்.அப்போது. ஊராட்சி தலைவர் கவுசல்யா வேல்முருகன், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை