உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

நகை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

சிதம்பரம், : சிதம்பரத்தில் நகை கடை வியாபாரிகளை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றதை கண்டித்து சக நகை வியாபாரிகள் கடைகளை மூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு ேபாலீசார் நேற்று மாலை, சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள ஒரு நகை கடையில், திருட்டு நகை வாங்கியதாக கூறி, வியாபாரிகள் மூவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத்தினர், நாங்கள் திருட்டு நகை வாங்கவில்லை. போலீசார் வீண் பழி சுமத்துவதாக கூறி, இரவு 9:00 மணிக்க கடைகளை மூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.எஸ்.பி., ரகுபதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று வியாபாரிகள் 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ