வழக்கறிஞரணி சார்பில் ஜெ., பிறந்தநாள் விழா
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, வழக்கறிஞரணி மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள் அழகன், நகர செயலர் சந்திர குமார் முன்னிலை வகித் தனர்.மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதில், வழக்கறிஞரணி நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், ஜெயசங்கர், மோகன்ராஜ், ராஜேஷ், தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில், ஜெ., உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.