கருணாநிதி நுாற்றாண்டு விழா விருத்தாசலத்தில் பேச்சுப்போட்டி
விருத்தாசலம் : கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், விருத்தாசலம் பூதாமூரில் பேச்சுப் போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பத்மபிரியா, தேவபாலன் நடுவர்களாக செயல்பட்டு, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துரைராஜ், ராஜேஷ், நாராயணசாமி, சதாம் ஜார்ஜ், பாரதிராஜா, நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.