உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கே.எஸ்.ஆர்., பள்ளி ஆண்டு விழா

கே.எஸ்.ஆர்., பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம் : விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹ டெக் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். மேலும், இஸ்ரோவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் பேசினார்.அதன்பின், ஆண்டு இதழ் ஸ்மிரிதி 2024 வெளியிடப்பட்டது. விழாவில், பள்ளி நிர்வாக இயக்குனர் ரஞ்சித், நிர்வாக அதிகாரி ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி முதல்வர் பெட்ரீசியா செபஸ்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ