உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி ரவுடிக்கு குண்டாஸ்

நெய்வேலி ரவுடிக்கு குண்டாஸ்

கடலுார் : நெய்வேலி ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நெய்வேலி, கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (எ) ஆனந்தராஜ், 34; இவர், கடந்த 12ம் தேதி மந்தாரக்குப்பம் 2வது சுரங்கம் அருகில் நண்பர் பிரபு என்பவருடன் நடந்து சென்றார். அப்போது, நெய்வேலி, மேம்பாப்பனாம்பட்டு மணிகண்டன் மகன் அப்பு (எ) சிவக்குமார், 25; உட்பட 6 பேர் முன்விரோதம் காரணமாக வழிமறித்து கத்தி மற்றும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார் உட்பட 6 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், சிவக்குமார் மீது மந்தாரக்குப்பம் போலீசில் 2 கொலை முயற்சி, ஒரு திருட்டு வழக்கு உள்ளது, ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. மேலும், நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் 5 திருட்டு வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளது.இவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் சிவக்குமாரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை