உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடி போதையில் கூலி தொழிலாளி இறப்பு

குடி போதையில் கூலி தொழிலாளி இறப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே குடிபோதையில் பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருவதிகை செட்டிப்பட்டறை காலனி பால்வாடி தெருவை சேர்ந்தவர் சிவராமன்,37; கூலி தொழிலாளி. சிவராமனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சிவராமன் தினம் குடித்து வந்தார்.கடந்த 29ம் தேதி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தத்தில் சிவராமன் இறந்த நிலையில் கிடந்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை