உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபாச படம் வௌியீடு மதுரை டாக்டர் கைது

ஆபாச படம் வௌியீடு மதுரை டாக்டர் கைது

சிதம்பரம்: மருத்துவக்கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட மதுரை டாக்டரை போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் ரகுராமன் மகன் சதீஷ்குமார்,27; டாக்டரான இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.இவர் 4 ஆண்டிற்கு முன் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்தபோது, உடன் படித்த மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, மாணவியின் படத்தை எடுத்து சேமித்து வைத்துள்ளார். அந்த படத்தை தற்போது ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, டாக்டர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை