நெய்வேலி : நெய்வேலியில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ கண் சிகிச்சை முகாம் நடந்தது.நெய்வேலி என்.எல்.சி.,- தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்த முகாமில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., நெய்வேலி நகர செயலாளர் குருநாதன் வரவேற்றார். அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, 110 தி.மு.க.,வினர் ரத்த தானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, தலைவர் வீரராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், அரசு கூடுதல் வழக்கறிஞர் சிலம்பரசன், மாவட்ட பிரதிநிதிகள் நாசர், ரவிச்சந்திரன், செந்தில், இளங்கோ, தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, நகர துணை செயலாளர் கருப்பன், முன்னாள் பொருளாளர் கலியன், மாவட்ட தொண்டரணி தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.