உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டில் பாலம் பணி: கலெக்டர் ஆய்வு

நடுவீரப்பட்டில் பாலம் பணி: கலெக்டர் ஆய்வு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கெடிலம் ஆற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போது வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு விடுத்த கோரிக்கையில் அடிப்படையில் புதிய பாலம் கட்ட நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பபட்டது.அதையடுத்து பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது.நேற்று காலை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் சிவக்குமார்,நபார்டு கோட்டப்பொறியாளர் வெள்ளிவேல்,நபார்டு உதவி கோட்டப்பொறியாளர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி