தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் அழைப்பு
சிறுபாக்கம் : மங்கலம்பேட்டையில் நடக்கும் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, மத்திய அரசை கண்டித்து 'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுதும் நடக்கிறது.அதன்படி, கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் நாளை 12ம் தேதி மாலை 5:00 மணியளவில் மங்கலம்பேட்டை, தேரடி வீதி அருகே அண்ணா திடலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.எனது தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி கண்டன உரையாற்றுகிறார்.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தி.மு.க., நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, கிளை, வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக முகவர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.