உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் தி.மு.க., பேச்சுப்போட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

சிதம்பரத்தில் தி.மு.க., பேச்சுப்போட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில், தி.மு.க., இளைஞரணி நடத்திய கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சு போட்டியை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.சிதம்பரம் தனியார் மண்டபத்தில், கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற, 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில், கருணாநாதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் தலைமை தாங்கினார். கடலூர் பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், பேச்சு போட்டியை துவக்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.பேச்சுப்போட்டியில், மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ஆடுதுறை உத்தராபதி, அருள்அமுதன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த பேச்சாளர்ளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.50 லட்சம் பணம் மற்றும் பரிசுகளை மாவட்ட பொருளாளர் கதிரவன் வழங்கினார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ