மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
10-Mar-2025
புவனகிரி; புவனகிரியில் குரங்கு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.புவனகிரி பகுதியில் சாலை ஓரங்கள், வயல்கள், தோட்டப்பகுதி மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. சவுராஷ்டிரா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஓடுகள், டெலிபோன் கேபிளை அறுத்து சேதப்படுத்துகிறது. வீடுகளில் புகுந்து பொருட்கள் மற்றும் தென்னை, கொய்யா, மா மரங்களில் காய்களை சேதப்படுத்தி வருகிறது. சாலையில் தாறுமாறாக ஓடுவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, குரங்குகளைப் பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-Mar-2025