உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இயற்கை வழிபாடு

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இயற்கை வழிபாடு

கிள்ளை : சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி, முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை வழிபாடு நடந்தது.அதையொட்டி, ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நடந்த இயற்கை வழிபாட்டில் பக்தர்கள், குரு போற்றி, ஆதி பராசக்தி போற்றி, மழை வேண்டல், பஞ்சபூத வழிபாடு செய்து, தியானத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், பேராசிரியர் ஞானகுமார், ஆனந்த், சுமதி, லட்சுமி, அமுதா, நாகலட்சுமி, பாண்டியம்மாள், சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !