உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.சி.சி., மாணவர்களுக்கு ஆண்டு பயிற்சி துவக்கம்

என்.சி.சி., மாணவர்களுக்கு ஆண்டு பயிற்சி துவக்கம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் என்.சி.சி., 6 வது பட்டாலியன் படைப்பிரிவு சார்பில் ஆண்டு பயிற்சி முகாம் துவங்கியது.சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், 6 வது படை பிரிவின் கமெண்டிங் ஆபிசர் கர்னல் ராவ் தலைமை தாங்கினார். பயிற்சியில் இந்திய ராணுவத்தின் வரலாறு, சுகாதாரம், தன் சுத்தம், முதலுதவி, துப்பாக்கி சுடும் பயிற்சி, தீ பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் ஆளுமை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.பயிற்சியில், சுபேதார் மேஜர் சத்தியம், என்.சி.சி., அதிகாரிகள் கேப்டன் சேவி, லெப்டினென்ட் நளினி செல்வி, பாட்டாலியன் ஹவில்தார் மேஜர் முனிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 400 பேர் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி